இருவரும் ஒரு வருடமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் வர்த்தகத்தில் முதலீடு செய்யுமாறு தல்ஜித்திடம் அனிதா கூறியுள்ளார். இதையடுத்து முதல் கட்டமாக ரூ.3.2 லட்சம் முதலீடு செய்துள்ளார். இதில் அவருக்கு ரூ.24,000 லாபம் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து அனிதாவின் பரிந்துரையின்படி தன்னுடைய வாழ்நாள் சேமிப்பு பணம் ரூ.4.5 கோடியை வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளார். கடன் வாங்கிய ரூ.2 கோடியையும் அதில் முதலீடு செய்துள்ளார்.
பின்னர் வர்த்தக தளங்களில் இருந்து தன்னுடைய பணத்தை எடுக்க அவர் முயற்சி செய்தார். அப்போது,ரூ. 61 லட்சம் பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை கட்டணம் செலுத்துமாறு அவருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த தல்ஜித் சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்தார். சைபர் குற்ற பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் டேட்டிங் ஆப்பில் அனிதா என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள ஐடி போலி என்பது என்பது தெரியவந்துள்ளது. தல்ஜித் சிங் பணம் செலுத்திய வங்கி கணக்குகள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வாழ்க்கையில் அன்பை தேடி டேட்டிங் ஆப்பில் இணைந்தவர் ரூ.6 கோடி பணத்தை இழந்தார்: சைபர் குற்ற பிரிவு போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.