பனாஜி: கோவா காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் தாக்கப்படும் என மிரட்டல் விடப்பட்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவா தலைநகர் பனாஜியில் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று காலை 9 மணிக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், “கோவா டிஜிபி அலுவலகம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்” என மிரட்டல் விடப்பட்டிருந்தது.
இதையடுத்து காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் அலோக் குமாரின் அதிகாரப்பூர்வ இல்லம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மிரட்டல் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கோவா டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.