துவரங்குறிச்சி, மார்ச் 25: துவரங்குறிச்சி செட்டிய குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி – நத்தம் சாலையில் உள்ள செட்டிய குளம் உள்ளது. இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருந்த குளம் ஆனால் தற்போது இந்த குளத்தில் போதுமான அளவு தண்ணீர் இருந்தாலும் குளத்தை முற்றிலும் மறைத்து ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. மேலும் குலத்தைச் சுற்றிலும் கருவேல மரங்களும் ஆக்கிரமித்துள்ளது.
குளத்தை சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளிலிருந்து விஷப் பூச்சிகள் சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கு படையெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது .இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இக்குளத்தினை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை கொடிகளை அகற்றி மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை கொடுத்துள்ளனர்.
The post துவரங்குறிச்சியில் செட்டியகுளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? appeared first on Dinakaran.