திருச்சி, மார்ச் 23: உலக வன தினத்தை முன்னிட்டு, வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் காட்டூர் ஆதிதிராவிடர் நல அரசு உயர்நிலை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் வேளாண் மாணவிகள் உலக வன தினத்தின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு குறித்து பேசினர். வனங்களின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் அறிவூட்டும் வகையில், ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரை போட்டி போன்ற போட்டிகள் நடந்தது.
“வனத்தை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியை தேன்மொழி, பட்டதாரி ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் வசந்தி பெர்னார்டு, தமிழ் ஆசிரியர் வீர செல்வன் ஆகியோர் மற்றும் கல்லூரி மாணவிகள் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தனர். இந்த நிகழ்சியை வேளாண் மாணவிகளாகிய அபிநயா, ஆன்டன் பவுலின் மேரி, தாரிணி, ஹரிதா, ஜோதிபிரியா, கிருத்திகா, லாவண்யா, பிரித்திகா, ரம்யா, செந்தமிழ்சுடர், சுவேதா, விஜயலட்சுமி ஆகியோர் சிறப்பாக நடத்தினர்.
The post காட்டூர் அரசு பள்ளியில் உலக வன தின கொண்டாட்டம் appeared first on Dinakaran.