திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு பெண் பலி

 

திருச்சி, மார்ச் 23: திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு பெண் பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி சஞ்சீவி நகர் ரயில்வே மேம்பாலம் கீழ், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர், அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில் கிடந்தார்.

இவர் ஊதா நிறத்தில் பூ போட்ட சேலையும், பச்சை கலர் ஜாக்கெட்டும், இடுப்பில் பாவாடைக்கு பதிலாக ஊதா நிறத்தில் கட்டம் போட்ட கைலியும் அணிந்திருந்தார். இவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. எனவே இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள், திருச்சி இருப்புப்பாதை போலீஸ் நிலைய எஸ்ஐ மகேஸ்வரனிடம், 97888 69578, 86672 59844 என்ற எண்களில் அழைத்து தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: