துவரங்குறிச்சி, மார்ச் 24: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி செக்போஸ்ட்-நத்தம் செல்லக்கூடிய சாலை சிதலமடைந்து இருப்பதால் அப்பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றன. மேலும் பெரும் அளவிலான பள்ளங்கள் இருப்பதால் அவசர உதவிக்கு செல்லக்கூடிய வாகனங்கள் விரைந்து செல்ல முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்தும் நடந்தேறுகிறது. இதனால் நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இப்பகுதியில் இருந்து துவரங்குறிச்சி நத்தம் தேசிய நெடுஞ்சாலை மதுரை வரை செல்லக்கூடிய பிரதான சாலை அமைந்துள்ளதால் இப்பகுதியில் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினர் இப்பகுதியில் சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
The post சேதமடைந்த நத்தம் சாலை விரைவில் சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.