சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையை பற்றி பேசிக்கொண்டிருகின்றனர். சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா? என கூறினார். இந்த நிலையில், அண்ணாமலையின் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது: சிறைக்கு அஞ்சாத நெஞ்சங்கள் தான் திமுகவில் உள்ளவர்கள். ஆதாரமில்லாமல் அண்ணாமலை கருத்துகளை தெரிவிக்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள அமைச்சர்களை மனதில் வைத்து அண்ணாமலை இந்த கருத்தை சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கிறேன். கடமை, கண்ணியம், கட்டுப்பாடுகளை கற்றுக்கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா. 2024 தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பாஜகவை அலற வைத்துள்ளோம். 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெறுவோம். 2026ல் 200 என்பது நிச்சையம் 234 என்பது லட்சியம் என்று தன் எங்களுடைய பயணம் அமைந்து இருக்கின்றது என்று கூறியுள்ளார்.
The post 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெறுவோம்: அமைச்சர் சேகர்பாபு! appeared first on Dinakaran.