இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை நடத்தினர். அப்போது காரின் டிக்கி பகுதியில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக மொத்தம் 2 கோடி ரூபாய் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். கடத்தலுக்காக பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். ரூ.2 கோடி பணத்திற்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை செய்ததில், அவர்கள் திருச்சூர் மாவட்டம் தொட்டிப்பாலை சேர்ந்த அர்ஜூண் (31), திருச்சூர் மாவட்டம் கொடகராவை அடுத்த பேராப்பிராவை சேர்ந்த பிரேஷீல் (39) என்றும் தெரியவந்தது.
சென்னையிலுள்ள கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு பணம் கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பணத்திற்குரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வாளையார் போலீசார் தெரிவித்தனர். மேலும் அர்ஜூன் ஒரு சிவில் வழக்கு சம்பந்தமுடையவர், பிரேஷீல் மீது வழக்குகள் ஒன்றுமில்லை என தெரிய வந்தது. தொடர்ந்து, இருவர் மீதும் வாளையார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தமிழக-கேரள எல்லை சுங்கச்சாவடியில் ரூ.2 கோடி ஹவாலா பணம், சொகுசு கார் பறிமுதல்: 2 பேரிடம் தீவிர விசாரணை appeared first on Dinakaran.