திருமானூரில் ஜல்லிக்கட்டு 500 காளைகள் சீறிப்பாய்ந்தன

அரியலூர்: திருமானூரில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒற்றுமை திடலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் திருச்சி, மதுரை, தேனி, அரியலூர், சிவகங்கை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500 காளைகள் அழைத்து வரப்பட்டன. 600 வீரர்கள் பங்கேற்றனர். காலை 9.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. எம்எல்ஏ சின்னப்பா உறுதிமொழி வாசித்து கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

முதலில் கோயில் காளையும், தொடர்ந்து மற்ற காளைகளும் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர். போட்டியில், காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு, ரொக்கப் பணம், பீரோ, சேர், சில்வர் அண்டா உட்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. திரளானோர் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். அரியலூர் எஸ்பி தீபக் சிவாஜ் உத்தரவின்பேரில் டிஎஸ்பி ரகுதி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

The post திருமானூரில் ஜல்லிக்கட்டு 500 காளைகள் சீறிப்பாய்ந்தன appeared first on Dinakaran.

Related Stories: