புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

திருப்பூர், மார்ச் 20: புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்த புதிய வழித்தடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அந்தந்த வட்டார போக்கு வரத்து அலுவலகங்கள் வாயிலாக பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட ரங்கநாதபுரம் முதல் ஜேஜே நகர், கயித்தமலை முதல் குன்னம்பாளையம், குறிச்சிபுதூர் முதல் பல்லகவுண்டன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி.குன்னத்தூர் பஞ்சாயத்து அலுவலகம் முதல் ஒத்தப்பனைமேடு, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட உப்பிலிபாளையம் பிரிவு முதல் பரமசிவம்பாளையம், காங்கயம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட அக்கரைபாளையம் மாரியம்மன் கோயில் முதல் கல்லாங்காட்டுவலசு, முத்தூர், அரசு மருத்துவமனை முதல் வெள்ளகோவில் புனித அமல அன்னை மகளிர் பள்ளி, சேனாதிபாளையம் முதல் இடைக்காட்டு வலசு, உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தளி ரோடு சிக்னல் முதல் வெட்னரி கல்லூரி, தாஜ் தியேட்டா் பஸ் நிறுத்தம் முதல் மனுப்பட்டி வரை உள்ளிட்ட வழித்தடங்களுக்கு 82 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில், ஒருவர் மட்டுமே வழித்தடத்தை கேட்டு விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒருவருக்கு மேல் ஒரு வழித்தடத்தை கேட்டவர்களுக்கு குலுக்கல் முறையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழித்தடம் ஒதுக்கப்பட்டது. இதற்கு வருவாய் அதிகாரி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர். 13 வழித்தடங்களுக்கு நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள வழித்தடங்களுக்கு ஒதுக்கீடு விரைவாக நடைபெறும் என அதிகாரிகள் தொிவித்தனர்.

The post புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க குலுக்கல் முறையில் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: