தாராபுரம் அருகே 73 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா

தாராபுரம், மார்ச் 14: தாராபுரத்தை அடுத்த வீராச்சிமங்கலம் கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளர்களே அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களில் குடியிருக்க சொந்த வீடுகளோ, வீட்டு மனைகளோ இல்லாத நபர்கள் குறித்த கணக்கீடுகள் எடுக்கப்பட்டு 73 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று வீராச்சிமங்கலம் சமுதாய நல கூட அரங்கில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு 73 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தாராபுரம் திமுக ஒன்றிய செயலாளர் செந்தில் குமார், ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் (பொ) குமார், தாராபுரம் தாசில்தார் திரவியம் மற்றும் வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post தாராபுரம் அருகே 73 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா appeared first on Dinakaran.

Related Stories: