டாஸ்மாக் கடையில் முதல்வர் படம் ஒட்டிய விவகாரம் பாஜ மாநில செயலாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு

திருப்பூர், மார்ச் 21: திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் இருந்து முருகம்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் பாஜ மாநில செயலாளர் மலர்கொடி தலைமையில் முதல்வரின் படத்தை ஒட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு மாநிலச் செயலாளர் மலர்கொடி உட்பட 5 பேரை போலீசார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து தகவலறிந்த பாஜகவினர் வீரபாண்டி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இந்நிலையில் அனுமதியின்றி டாஸ்மாக் கடையில் முதல்வர் படத்தை ஒட்டியதற்காக, மாநில செயலாளர் மலர்கொடி உட்பட 7 பேர் மீது 5 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post டாஸ்மாக் கடையில் முதல்வர் படம் ஒட்டிய விவகாரம் பாஜ மாநில செயலாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: