திருப்பூர், மார்ச் 14: உலகின் முன்னணி கற்றல் நிறுவனமான பியர்சனின் வருடாந்திர `எட் எக் செல்’ விருதுகள் வழங்கும் விழாவான சிறந்த பியர்சன் கற்றவர்கள் விருதுகள் வழங்கும் விழா (அவுட் ஸ்டாண்டிங் பியர்சன் லேர்னர்ஸ் அவார்ட்ஸ்) சென்னையில் நடத்தப்பட்டன. இதில், கிட்ஸ் கிளப் சர்வதேசப் பள்ளியைச் சேர்ந்த தன்விகா மற்றும் ரெஸ்வின் ஆகிய இரு மாணவர்களின் கணித பாடத்தில், தங்கள் கல்விச் செயல் திறனுக்காக உலகின் முதல் தரவரிசையைப் பெற்று, பியர்சன் எக்ஸலன்ஸ் விருதைப் பெற்றுள்ளனர் மற்றும் மாணவர்களின் சிறந்த சாதனையை நினைவு கூறும் வகையில் பியர்சன் எஜுகேஷனின் மூத்த தலைவரால் வழங்கப்படும் சிறப்புச் சான்றிதழ்களையும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
The post கிட்ஸ் கிளப் பள்ளி மாணவர்களுக்கு பியர்சன் எக்ஸலன்ஸ் விருது appeared first on Dinakaran.