திருவாரூர் கூட்டுறவு சார்பில் இளைஞர் ஈர்ப்பு முகாம்

 

திருவாரூர்,மார்ச் 19: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் சித்ரா தலைமையில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் மாணவிகளுக்கு கூட்டுறவு சங்கங்களால் துவங்கபட்ட மருந்தகங்களின் பயன்பாடுகளையும் மற்றும் குறைந்த விலைகளில் மருந்து மாத்திரைகள் கிடைக்கும் என எடுத்துரைத்தார். மேலும் மாணவிகளுக்கான இளைஞர் ஈர்ப்பு முகாமினை துவங்கி வைத்தார்.

இம்முகாமில் திருவாரூர் சரக துணை பதிவாளர் வினோத் மற்றும் பொதுவிநியோக திட்டத்தின் துணைபதிவாளர் பாதிமா சுல்தான மற்றும் பயிற்சி துணைபதிவாளர் தினேஷ் மற்றும் திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் பிரியா, கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் முதல்வர் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்சிக்கான முன் ஏற்பாட்டினை கூட்டுறவு ஒன்றியத்தின் வளர்ச்சி அலுவலர் மாலா மற்றும் மேலாளர் ராஜராஜன் செய்திருந்தனர்.

The post திருவாரூர் கூட்டுறவு சார்பில் இளைஞர் ஈர்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: