திருவாரூர், மார்ச் 19: பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களில் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வரும் வழக்குகளை உடனடியாக விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் திருவாரூரில் நேற்று பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் சுலோச்சனா தலைமையிலும், மாவட்ட செயலாளர் சுஜாதா முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் மாலா பாண்டியன், தமயந்தி, உஷா, தமிழ் செல்விராஜா, பாஸ்கரவள்ளி, அருளச்செல்வி, மீனாம்பாள், கவிதா, பூபதி, மணிமேகலை, மீனாம்பிகை, அன்னபாக்கியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post திருவாரூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.