தொழில்துறை உற்பத்தி புள்ளி அடிப்படையில் இந்த வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. ஜனவரியில் உற்பத்தி துறை வளர்ச்சி 5.5 சதவீதமாக உள்ளது. அதேநேரத்தில் சுரங்க துறையில் 4.4 சதவீதம் மட்டுமே உற்பத்தி உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் இது 6 சதவீதமாகியுள்ளது. மின் உற்பத்தி 2.4 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் தொழில்துறை உற்பத்தி 4.2 சதவீதம் உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில் இது 6 சதவீதமாக இருந்தது, என புள்ளியியல் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post கடந்த ஜனவரியில் தொழில்துறை உற்பத்தி 5% அதிகரிப்பு appeared first on Dinakaran.