இந்நிலையில் அரியானா- மிசோரம் அணிகள் இடையே நேற்று அரை இறுதிப் போட்டி நடந்தது. அதில் 4-0 கோல் கணக்கில் அரியானா வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரை இறுதியில் மகாராஷ்டிரா – ஜார்க்கண்ட் அணிகள் மோதின. கடைசி வரை யாருக்கும் வெற்றி கிடைக்காததை அடுத்து, ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜார்க்கண்ட் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
The post தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: அரியானா, ஜார்க்கண்ட் இறுதிப் போட்டிக்கு தகுதி appeared first on Dinakaran.