மற்றொரு போட்டியில் பிரான்ஸ் வீரர் டோமா ஜூனியர் போபோவ் உடன் இந்திய முன்னணி வீரர் எச்.எஸ். பிரனாய் மோதினார். முதல் செட்டை போராடி வென்ற போபோவ், 2வது செட்டை எளிதில் கைப்படுத்தினார். இதனால், 21-19, 21 -16 என்ற நேர் செட் கணக்கில் போபோவ் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். முக்கியத்துவம் வாய்ந்த பேட்மின்டன் போட்டியாக கருதப்படும் ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் ஓபன் போட்டியில் கடந்த 1980ம் ஆண்டு பிரகாஷ் படுகோன், 2001ம் ஆண்டு, கோபிசந்த் வென்று சாம்பியன் பட்டம் வென்றனர். அதன் பின், கிடாம்பி காந்த், பி.வி.சிந்து, சாய்னா நெஹ்வால் உள்ளிட்ட நட்சத்திர வீரர், வீராங்கனைகள் இருந்தும் இந்த பட்டத்தை வெல்ல முடியாத நிலை காணப்படுவது, பேட்மின்டன் ரசிகர்களை கவலையடையச் செய்து வருகிறது.
The post ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன்: தைவான் வீரரை வீழ்த்திய இந்திய வீரர் லக்சயா சென் appeared first on Dinakaran.