வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் நான் மட்டும் போட்டியிட்டிருந்தால் டொனால்ட் ட்ரம்பை நிச்சயம் தோற்கடித்திருப்பேன் என அமெரிக்க நாளிதழுக்கு ஜோ பைடன் அளித்த பேட்டியில் தெரிவித்தார். வயது மூப்பு காரணமாக நான் போட்டியிலிருந்து விலகியதால் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டார் என அவர் தெரிவித்தார்.