தொடர் விபத்துகளை தடுக்க இளையரசனேந்தல் சாலையில் பேரிக்கார்டு

கோவில்பட்டி, ஜன. 9: அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கோவில்பட்டி நகர செயலாளர் செந்தில்ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள், டிஎஸ்பி ஜெகநாதனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு சுரங்கப்பாதை ஆரம்பம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை உள்ள பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் மின்வாரிய அலுவலகம், அரசு போக்குவரத்து கழக டெப்போ உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே வேகத்தடை அமைக்க வலியுறுத்தி நெடுஞ்சாலை துறையிடம் மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த சாலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக பேரிக்கார்டு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post தொடர் விபத்துகளை தடுக்க இளையரசனேந்தல் சாலையில் பேரிக்கார்டு appeared first on Dinakaran.

Related Stories: