கடையை அகற்ற கோரிக்கை: நாளை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு

ஊட்டி, ஜன. 9: நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளன் கூறியிருப்பதாவது: 2024-25ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை சட்டமன்ற அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் குறைகளை தீர்வு செய்யும் வகையில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளரின் கட்டுப்பாட்டில் நீலகிரி மண்டலத்தில் 140 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

பொது விநியோக திட்ட பணியாளர்கள், கூட்டுறவு சங்கங்களில் தற்போது பணியாற்றும் சங்க பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் பணி தொடர்பாகவும், பணியின் போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகளை விதிகளுக்கு உட்பட்டு தீர்வு செய்திடும் வகையில் மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நீலகிரி மண்டல இணை பதிவாளர் மற்றும் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ஆகியோர் தலைமையில் ஊட்டியில் உள்ள என்டிசிசி வங்கி கூட்ட அரங்கில் நாளை 10ம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், அனைத்து சங்க பணியாளர்களும், ஓய்வுபெற்ற பணியாளர்களும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

The post கடையை அகற்ற கோரிக்கை: நாளை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு appeared first on Dinakaran.

Related Stories: