வருசநாடு அருகே விளைநிலங்களில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை

வருசநாடு, ஜன.9: வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பண்டாரவூத்து மலை கிராமச் சாலையில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காட்டுப் பன்றிகள் இரவு நேரங்களில் தோப்புக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதாகவும், தென்னங் கன்றுகளை வேரோடு பிடுங்கி எறிந்து சேதப்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதே போல் பசுமலைத்தேரி பகுதியிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரக்கன்றுகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு காட்டு பன்றிகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றும், காட்டுப் பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வருசநாடு அருகே விளைநிலங்களில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: