ஜன.14ல் நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்: போலீஸ் கமிஷனர் ஆய்வு

அவனியாபுரம், ஜன. 9:தமிழர் திருநாளை முன்னிட்டு, மாவட்டத்தில் முதலாவதாக ஜன.14ம் தேதி தைப்பொங்கலன்று மதுரை, அவனியாபுரத்தில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கானஏற்பாடுகள் அனைத்தும் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இதன்படி அவனியாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள வாடிவாசல், காளைகளை பரிசோதிக்கும் இடம், காளைகளை ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிக்கு கொண்டு வரும் பாதை, காளைகள் சேகரிக்கும் இடம் மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ள பகுதி ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். பின்னர் பாதுகாப்பு தொடர்பாக அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வவிநாயகம், முன்னாள் கவுன்சிலர் கருப்பசாமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post ஜன.14ல் நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்: போலீஸ் கமிஷனர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: