பந்தலூர், ஜன. 9: பந்தலூர் அருகே அய்யன்கொல்லி அம்பேத்கர் நகர் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்திட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அய்யன்கொல்லி அம்பேத்கர் நகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சேரங்கோடு ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பல இடங்களில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் போடப்பட்ட குழாய்கள் முறையாக பராமரிப்பு செய்யாமல் இருப்பதால் சீரான குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடைகாலம் என்பதால் குடிநீர் குழாய்கள் மற்றும் நீர் ஆதாரங்களை முறையாக பாராமரிப்பு செய்து மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சீரான குடிநீர் விநியோகம் செய்ய மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.