திருப்பூர், ஜன.9: பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்க கரும்புகள் கொண்டுவரப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பினை இன்று (வியாழக்கிழமை) முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இதற்கான பொருட்கள் அனைத்தும் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி திருப்பூர் வளர்மதி கூட்டுறவு பண்டக சாலைக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்க கரும்புகள் லாரிகளில் டன் கணக்கில் வந்துள்ளது. இவை காங்கயம் சாலையில் உள்ள அங்கன்வாடி கிடங்கிற்கு வந்துள்ளது. இவை அந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
The post பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க கரும்புகள் வருகை appeared first on Dinakaran.