விசாரணையின் போது ஆர்.கே.சுரேஷ் சார்பில் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி, ஆரூத்ரா மோசடி விவகாரத்திற்கும் மனுதாரருக்கும் எந்த தொடர்புமில்லை. வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளார் என்றார். வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்வதற்கு பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஏழு வங்கி கணக்குகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் என ஏழு லட்சம் ரூபாயை இரண்டு வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆர்.கே.சுரேஷ்க்கு சொந்தமான முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்க உத்தரவிட்டது.
The post ஆரூத்ரா கோல்ட் மோசடி வழக்கில் முடக்கப்பட்ட நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்கு விடுவிப்பு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.