தமிழகத்தில் 14ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வட தமிழகம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அத்துடன் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் இன்றும், நாளையும், ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 14ம் தேதி வரையில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் ஓரளவுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

The post தமிழகத்தில் 14ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: