நீடாமங்கலம், ஜன.8: கொரடாச்சேரியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயி ற்சி நடந்தது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 1-3 வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் இரண்டு நாள் பயிற்சியை வட்டார கல்வி அலுவலர் விமலா தொடங்கிவைத்தார். இந்த பயிற்சியை பார்வையிட்டு, மாணவர்களின் வாசித்தல் திறன் மேம்படவும், கற்றல் திறன் மேம்படவும், அறிவுரை வழங்கினர். மன்னார்குடி மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனமுதல்வர் மயில்வாகனன், மற்றும் முதுநிலை விரிவுரையாளர் சந்திரா, விரிவுரையாளர் கலைச்செல்வி, வட்டார கல்வி அலுவலர் 2 சுமதி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) பிருந்தாதேவி, ஆசிரிய பயிற்றுநர் ராஜபாண்டியன், கருத்தாளர்கள் பிரபாகரன், மாதவன், மற்றும் பயிற்சியில் 93 இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
The post கொரடாச்சேரியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி appeared first on Dinakaran.