தென்காசி, ஜன.9: தென்காசியில் கட்டுமான முறைசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.15 ஆயிரம் வழங்க வலியுறுத்தி ஏஐசிசிடியு கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளர் மாவட்ட நலவாரிய அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிடும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்ட தலைவர் அழகையா தலைமை வகித்தார். கட்டுமான சங்க மாவட்ட நிர்வாகிகள் முருகையா, வில்சன், மாரியப்பன், மரியசுந்தர், பரமசிவன், பொன்செல்வன், மாடசாமி, ரஹீமாள், பலவேசம், முருகன், குமார், மாடசாமி முன்னிலை வகித்தனர். மாநிலத்தலைவர் சங்கரபாண்டியன் போராட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட பொதுச்செயலாளர் வேல்முருகன் நிறைவுறையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் புதியவன், ஏஜசிசியுடி கட்டுமான சங்க மாவட்ட பொதுச்செயலாளர் மாதவன், மாவட்ட குழு உறுப்பினர்கள் முத்துச்சாமி, தம்பித்துரை, ராமர் பாண்டியன், வேலு, அய்யம்பெருமாள், கிளைச்செயலாளர்கள் அரிச்சந்திரன், பாலசுப்பிரமணியன், கருப்பையா, மாரியப்பன், வேலு, பீட்டர், பீடி சங்கத்தலைவர் மைதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.
The post தென்காசியில் கட்டுமான தொழிலாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.