நாகப்பட்டினம், ஜன.8: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் நாகப்பட்டினத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தமிழ்ஒளி தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக நாகூரை சென்றடைந்தது. மரங்கள் வளர்ப்போம், மண் வளம் காப்போம். மரங்கள் வளர்ப்போம் மழை நீரை பெறுவோம். நீர், காற்று, நில மாசுபாடுகளை தவிர்ப்போம். பொது இடங்களில் அசுத்தம் செய்வதை கைவிடுவோம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி மாணவர்கள் சென்றனர்.
The post பொங்கல் தொகுப்பு கரும்பு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை சார்பில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.