அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள், உடனடியாக அருண்குமாரை மீட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அருண்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மருத்துவமனை சார்பில் துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அருண்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்போட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார், அருண்குமாரை அடித்துக்கொலை செய்த அவரது நண்பன் விநாயகமூர்த்தியை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post நண்பர்களுடன் மது அருந்தியபோது தகராறு ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர் அடித்துக்கொலை: பெருங்குடியில் பரபரப்பு appeared first on Dinakaran.