ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சஞ்சீவிபுரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் துளசிராமன் (26). தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 4ம்தேதி தனது நண்பருடன் இஎம்ஆர் கண்டிகை – வானூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சிஜிஎன் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பொன்னரசு (23) என்பவர், பைக்கில் சென்றபோது துளசிராமனின் நண்பர் மீது மோதிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், துளசிராமன் தனது நண்பருடன் ஒரு ஓட்டலில் சாப்பிட்டபோது, பொன்னரசு மற்றும் அவரது நண்பர்களான மணி, விஜயன் உள்ளிட்ட 5 பேர் வந்து, துளசிராமனை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து துளசிராமன், தன்னை தாக்கியதாக பொன்னரசு, மணி, விஜயன் ஆகியோர் மீது ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே பொன்னரசு தரப்பிலும் துளசிராமன், தாமு, சரத் உட்பட 5 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இருதரப்பு புகாரின்பேரின் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று துளசிராமன் மற்றும் பொன்னரசு ஆகிய 2 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கோஷ்டி மோதலில் 2 பேர் கைது appeared first on Dinakaran.