உத்திரமேரூர் அருகே பெண் தலைவரை தாக்கியவர் கைது

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கியவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது. உத்திரமேரூர் அடுத்த சிறுமையிலூர் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா. இவரது கணவர் மாதவன். அதே கிராமத்தை சேர்ந்த ரவி (63) என்பவர் விவசாய நிலத்திற்கு செல்லும்போது ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவிற்கும் ரவிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ரவி, சுகுணாவை தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சுகுணா உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் உத்திரமேரூர் போலீசார் ரவியின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உத்திரமேரூர் அருகே பெண் தலைவரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: