சென்னை: உலக சுகாதார நிறுவனம் எச்.எம்.பி.வி. வைரஸ் தொடர்பாக எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்; எச்.எம்.பி.வி. வைரஸ் பரவ தொடங்கியதாக தகவல் வந்தவுடனேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனம், ஒன்றிய சுகாதார அமைச்சகத்துடன் தொடர்பில் இருந்து வருகிறோம். கொரோனா, குரங்கம்மை பரவியபோது தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையங்களில் நேரடியாக ஆய்வு செய்தோம். அதேபோல எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
The post எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று.. WHO எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!! appeared first on Dinakaran.