திருச்சி, ஜன.6: திருச்சி மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் 2024, 2025ம் ஆண்டிற்கான ஆண்களுக்கான லீக் ஹாக்கி போட்டி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது. திருச்சி மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் கார்த்தி போட்டியினை துவக்கி வைத்தார். முதல் போட்டியில் திருச்சி பாய்லர் பிளான்ட் அணியும் பேபி மிரா மெமோரியல் ஹாக்கி கிளப் அணியும் நேற்று மோதின. ஒரு மாத காலம் வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் பல்வேறு கிளப், கல்லூரி, அகாடமி சேர்ந்த வீரர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஹாக்கி அணிகள் கலந்து கொள்கின்றனர். மேலும் இப்போட்டியானது நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு 25 அணிகள் பங்கேற்கின்றன. நேற்றைய ஆட்டத்தில் மணப்பாறை, பாய்லர் பிளான்ட், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கலந்து கொள்கின்றன. இப்போபோட்டியை ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், வைத்தி மற்றும் மாவட்ட ஹாக்கி சங்க பொருளாளர் பெனடிக் பிரபு, போட்டி இயக்குனர் சுகுமார் ஆகியோர் வழி நடத்தினர்.
The post அமைச்சர் கே.என்.நேரு புகழாரம் திருச்சி மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டி appeared first on Dinakaran.