×

தண்ணீர் லாரி மோதி நடந்து சென்றவர் பலி

 

திருச்சி, ஜன.5: திருச்சியில் சாலையில் நடந்து சென்றவர் மீது தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி கோட்டை ரயில் நிலையம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த, தண்ணீர் ஏற்றி செல்லும் டேங்கர் லாரி அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

The post தண்ணீர் லாரி மோதி நடந்து சென்றவர் பலி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Fort Railway Station ,Dinakaran ,
× RELATED கரூர்-திருச்சி பைபாஸ் சாலையில்...