- திருச்சி மாவட்டம்
- திருச்சி
- செல்வனகரத்தினம்
- சமாஜ்வாடி
- வரங்குமார்
- சரகா
- டிஐஜி
- செல்வனகராத்தினம்
- தின மலர்
திருச்சி, ஜன.7: திருச்சி மாவட்ட புதிய எஸ்பியாக செல்வநாகரத்தினம் நேற்று பொறுப்பேற்றார். திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் திருச்சி சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, புதிய எஸ்பியாக செல்வநாகரத்தினம் நியமனம் செய்யப்பட்டார். அவர் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, எஸ்பி செல்வநாகரத்தினம் கூறுகையில், ‘‘ திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடர்பாடும் இன்றி, சட்டம் ஒழுங்கு சிறந்த முறையில் பேணிகாக்கப்படும். ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருச்சி மாவட்டத்தில் சொத்து தொடர்பான வழக்குகளை விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், மேற்கொண்டு எந்தவித குற்றங்களும் நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் குறைகள் உடனுக்குடன் களைந்து தீர்வு காணப்படும். அவர்களுடன் காவல் துறையினர் நல்லுறவு மேம்படுத்தப்படும். காவல் துறையினரின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றி, மனசோர்வின்றி பணியாற்ற வழிவகை செய்யப்படும், காவல் நிலையங்களில் திறன்பாடு மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post திருச்சி மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு appeared first on Dinakaran.