- திருவரம்பூர் சட்டமன்றத் தொகுதி
- Thiruverumpur
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கல்வி அமைச்சர்
- அன்பில் மகேஷ் பியாமொழி
- திருவரம்பூர்
- திருவர்பூர் சட்டமன்றத் தொகுதி
- தமிழ்
- திருவரம்பூர் சட்டமன்றத் தொகுதி
- தின மலர்
திருவெறும்பூர், ஜன.4: திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.3 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் முடிவடைந்த வளர்ச்சி திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். திருவெறுபூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.3 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் முடிவடைந்த வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று துவக்கி வைத்தார்.
அதன்படி குண்டூர் ஊராட்சி திருவளர்ச்சிபட்டி கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். குண்டூர் ஊராட்சி அய்யன்பத்தூர் கிராமத்தில் உள்ள நெசவாளர் காலனி பகுதியில் 2 கிலோ மீட்டர் தூர தார் சாலையை திறந்து வைத்து அப்பகுதி மக்களிடம் குறைகள் கேட்டார். சூரியூர் ஊராட்சியில் புதிய அரசு துணை சுகாதார நிலைய கட்டிடம், சோழமாதேவி ஊராட்சியில் புதிய சமுதாயகூட கட்டிடம், நவல்பட்டு ஊராட்சி புதுத்தெரு கிராமத்தில் உய்ய கொண்டான் வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலம் ஆகியவற்றை திறந்து வைத்தார். இந்த பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.3 கோடியே 85 லட்சத்து 5 ஆயிரம் ஆகும்.
இந்த நிகழ்ச்சிகளில் திட்ட இயக்குனர் கங்காதரணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி, சண்முகசுந்தரம், ஜேம்ஸ் உட்பட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் ₹3.85 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் appeared first on Dinakaran.