நெல்லை: நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கேஎன் நேரு ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர்.
பின்னர் அமைச்சர் கேஎன் நேரு அளித்த பேட்டி: மணிமுத்தாறு அணை 100 அடியை நெருங்கியதால் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3, 4 ரீச்களுக்கு உட்பட்ட 12 ஆயிரத்து 18 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும். கேரள மருத்துவக் கழிவுகள் மீண்டும் அள்ளிச் செல்லப்பட்டுள்ளது. கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காது. இனி கொண்டு வர மாட்டார்க்ள். இதுபோன்ற நடவடிக்கைகள் எங்கும் நடக்காது. திருப்பி கழிவுகளை அள்ளிச் சென்றதாக சரித்திரம் கிடையாது. இனி கொண்டு வந்தால் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநில அரசாங்கம் ஒன்றிய அரசு அனுமதி இல்லாமல் கடன் வாங்க முடியாது. ஒன்றிய அரசின் அனுமதி பெற்றுத் தான் மாநில அரசின் திட்டங்களுக்காக தான் கடன் வாங்குகிறோம். அண்ணாமலை ஏதோ சொல்கிறார். அதுகுறித்து அவரிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும் என்றார்.
The post மருத்துவ கழிவு கொண்டு வந்து கொட்டினால் கைது நடவடிக்கை: அமைச்சர் கே.என். நேரு எச்சரிக்கை appeared first on Dinakaran.