சில்லி பாய்ன்ட்…

* ஆக்லாந்து டென்னிஸ் பைனலில் ஒசாகா
நியூலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் பெண்கள் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டங்களில் நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-4, 6-2 என நேர் செட்களில் அலிசியா பர்க்சையும் (அமெரிக்கா), கிளாரா டவ்சன் (டென்மார்க்) 6-4, 6-3 என நேர் செட்களில் மற்றொரு அமெரிக்க வீராங்கனை ராபின் மோன்ட்கோமேரியையும் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினர்.

* யுனைடெட் டென்னிஸ் இறுதியில் போலந்து
ஆஸியில் நடந்து வரும் யுனைடட் கோப்பை குழு டென்னிஸ் போட்டியின் முதல் அரையிறுதியில் நேற்று போலந்து-கஜகஸ்தான் அணிகள் மோதின. ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவுகள், கலப்பு இரட்டையர் என 3 பிரிவுகளிலும் நேர் செட்களில் கஜகஸ்தானை போலந்து அணி வீழ்த்தியது. அதன் மூலம் 3-0 என்ற கணக்கில் வென்று முதல் அணியாக இறுதி போட்டிக்கு தொடர்ந்து 2வது முறையாக முன்னேறி உள்ளது.

 

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Related Stories: