கருண் நாயர் உலக சாதனை

விஜயநகரம்: விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டியில் நேற்று உத்தரப்பிரதேசத்தை, விதர்பா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் ஆடிய விதர்பா அணியின் கருண் நாயர் 112 ரன் குவித்தார். இதன் மூலம், கடந்த 2010ல், உலகளவில் ஏ பிரிவு போட்டிகளில் அவுட்டாகாமல் தொடர்ச்சியாக 527 ரன் குவித்துள்ள நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் பிராங்க்ளின் சாதனையை கருண் நாயர் முறியடித்துள்ளார்.

விஜய் ஹசாரே போட்டிகளில் கருண் நாயர் அவுட்டாகாமல், ஜம்மு காஷ்மீருக்கு எதிராக 112 ரன், சத்தீஸ்கருக்கு எதிராக 44, சண்டீகருக்கு எதிராக 163, தமிழ்நாட்டுக்கு எதிராக 111 ரன் குவித்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது 112 ரன் எடுத்து அவுட்டானதன் மூலம், மொத்தமாக 542 ரன் குவித்து பிராங்க்ளின் உலக சாதனையை முறியடித்துள்ளார்.

The post கருண் நாயர் உலக சாதனை appeared first on Dinakaran.

Related Stories: