அரசு பள்ளிகளில் 24 முதுநிலை ஆசிரியர்கள் கூடுதல் பணியிடங்கள்: பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

சென்னை: பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவு: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருவின் அடிப்படையில் 24 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தேவையுள்ள பள்ளிகளுக்கு (ஆங்கிலம் -2, கணிதம் -6, வேதியியல் -4, தாவரவியல் -3, வணிகவியல் -9) அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது. புதியதாக அனுமதிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களை சார்ந்த பள்ளியின் அளவுகோல் பதிவேட்டில் பதிவுகள் மேற்கொண்டு பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு பள்ளிகளில் 24 முதுநிலை ஆசிரியர்கள் கூடுதல் பணியிடங்கள்: பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: