ஆனால், பொதுமக்கள் பார் அமைக்கவே வேலை செய்து வருவதாக கூறினர். கட்டிடத்தின் மேல்பகுதியில் பார் தொடர்பான பலகை உள்ளதாகவும் அதனை அகற்ற வேண்டும் எனவும் கூறினர். தகவல் அறிந்து காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், இடைக்கோடு பேரூராட்சி தலைவி உமாதேவி ஆகியோர் வந்து விசாரித்தனர். தனியார் பார் அமைப்பதற்கான பணிகள் நடந்ததை உறுதி செய்த எம்எல்ஏ, தகர சீட்டுகளை அகற்றுமாறு உரிமையாளரிடம் கூறினார். பணியாளர்கள் இல்லை என அவர்கள் கூறியதால், கூடியிருந்த மக்களே ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளை அகற்றினர். அப்போது, இங்கு பார் அமைத்தால் நானே தீ வைத்து கொளுத்திவிட்டு, இங்கு அமர்ந்து போராடுவேன் என்று தாரகை கத்பர்ட் எம்எல்ஏ ஆவேசமாக கூறினார். அதன்பின் போராட்டம் கைவிடப்பட்டது.
The post குமரி மாவட்டம் அருமனை அருகே பார் அமைத்தால் நானே தீ வைத்து கொளுத்துவேன்: காங்கிரஸ் எம்எல்ஏ ஆவேசம் appeared first on Dinakaran.