திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பரமபதவாசல் திறப்பின்போது 1500 பேருக்கு அனுமதி: ஆன்லைன் முன்பதிவு செய்யும் முதல் 500 பேருக்கு இலவசம்; அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பரமபதவாசல் திறப்பின் போது 1500 பேருக்கு அனுமதி வழங்கப்படும், ஆன்லைன் முன்பதிவு செய்யும் முதல் 500 பேருக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை திருவல்லிகேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் வரும் 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது. ஏகாதசியை முன்னிட்டு ஜன.10, 11 ஆகிய இரண்டு நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டும் சிறப்பு கட்டணம், சிறப்பு சேவை ரத்து செய்யப்படுகிறது. அனைவருக்கும் பொதுவான சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட உள்ளனர். 5 இடங்களில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் ஏற்கனவே இருப்பதோடு சேர்த்து 32 கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. 20 அடிக்கு காவலர்களும் குடிநீரும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழிப்பிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனம் என்று வரும்போது பரமபத வாசல் திறப்பின் போது ஒருவருக்கு ரூ.500 கட்டணம் என 1500 பேருக்கு எப்போதும் போல் வழங்குகிறார்கள்.

ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களில் முன்னுரிமை அடிப்படையில் 500 நபர்களுக்கு இலவசமாக டிக்கெட்கள் விநியோகிக்கப்படுகிறது. பரமபத வாசல் காலை 4.30 மணிக்கு திறக்கப்படும் சிறப்பு தரிசனம் அனைத்தும் ஆறு மணிக்கு உள்ளாக முடிந்த பிறகு பொது வரிசை 6 மணியிலிருந்து அனுமதிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் காலை 8 மணியிலிருந்து 10 மணி வரை தனியாக வரிசைப்படுத்தி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதியம் 2 மணியிலிருந்து 4 மணி வரை தனியாக அவர்களுக்கு வழி அமைத்து சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சுகுமார், இணை ஆணையர் ரேணுகாதேவி, துணை ஆணையர் நித்யா, மயிலாப்பூர் துணை காவல் ஆணையர் ஹரிகிரன், உதவி ஆணையர் இளங்கோவன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பரமபதவாசல் திறப்பின்போது 1500 பேருக்கு அனுமதி: ஆன்லைன் முன்பதிவு செய்யும் முதல் 500 பேருக்கு இலவசம்; அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: