கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண சம்பவம் குறித்த விசாரணை ஆணையத்திற்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண சம்பவம் குறித்த விசாரணை ஆணையத்திற்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்ததில் 69 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதிகோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு, 3 மாதத்தில் தனதுஅறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்தது.

தொடர்ந்து, கருணாபுரத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், உயிரிழந்தோர் குடும்பத்தினர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்திற்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நபர் ஆணையத்துக்கு 2-வது முறையாக கால நீட்டிப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பி.கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்துக்கு ஐன.31 வரை கால நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண சம்பவம் குறித்த விசாரணை ஆணையத்திற்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: