×

அரசு பள்ளி கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய கல்விக் கொள்கையில் ஒன்றான அரசு பள்ளிகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அரசு பள்ளிகள் தனியார் மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். அரசு பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்தி, கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசு பள்ளிகள் தனியார் மயமாக்கப்படும் என்பது வீணான வதந்தி என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினாலும், உண்மை நிலை என்ன என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்தவேண்டும். தனியார் பள்ளிகளின் தரத்திற்கு சமமாக, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு பள்ளி கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்...