×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக சண்முகம் தேர்வு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கட்சி பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் ஒருவர் எந்தவிதமான பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது.கே.பாலகிருஷ்ணனுக்கு அடுத்த மாதம் 72 வயது ஆக உள்ளதால், தன்னை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் மாநில மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி அக்கட்சியின் புதிய மாநில செயலாளராக மத்திய குழு உறுப்பினர் சண்முகம் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பு, விவசாய சங்க மாநில செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக சண்முகம் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Sanmugham ,Secretary of State ,Marxist Communist Party ,Chennai ,24th State Conference ,Viluppura ,Akkatsi K. Balakrishnan ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...