- மத்திய அமைச்சர்
- கிஷன் ரெட்டி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஹியா
- தில்லி சுப்ரீ
- சென்னை
- பாஜா
- தில்லி
- தின மலர்
சென்னை: தமிழக பாஜ தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம் ெசய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் பாஜ உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி தமிழகத்திலும் கிளைகள் முதல் மாவட்டம் வரை நிர்வாகிகள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வருகிற 15ம் தேதிக்குள் புதிய மாநில தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. தற்போதைய தலைவர் அண்ணாமலை பதவிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஒருவர் தலைவர் பதவியில் இருமுறை இருக்கலாம்.
அந்த வகையில், மீண்டும் அண்ணாமலைக்கே வாய்ப்பு வழங்கலாம் என்று பேச்சு அடிப்படுகிறது. ஆனால், அவருக்கு தலைவர் பதவி வழங்க கூடாது என்று சில தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே, வரும் சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில் அதிமுகவுடன் இணக்கமாக செல்பவர்கள், பாஜ மூத்த தலைவர்கள் பெயர் பரிசீலிக்கப்படுவதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதேபோல அகில இந்திய தலைவர் நட்டாவின் பதவி முடிவடைகிறது. புதிய தேசிய தலைவரையும் வருகிற 20ம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.
அனைத்து மாநிலங்களுக்கும் மாநில தலைவர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட பிறகு மாநில தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். இந்நிலையில் பாஜ மாநில தலைவர்கள், தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை கட்சி தேசிய தலைமை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் லட்சத்தீவுகள்- பொன்.ராதாகிருஷ்ணன், அந்தமான் நிகோபர் தீவுகள்- தமிழிசை சவுந்தரராஜன், மிசோரம்-வானதி சீனிவாசன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
The post தமிழக பாஜ தலைவரை தேர்வு செய்ய ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி பொறுப்பாளராக நியமனம்: டெல்லி மேலிடம் அறிவிப்பு appeared first on Dinakaran.