×

2026ல் அதிமுகவுக்கு எடப்பாடி முடிவுரை: தினகரன் தாக்கு

திருச்சி: திருச்சியில் அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் இன்று அளித்த பேட்டி:
போதை மருந்து பழக்கத்துக்கு ஆளானவர்கள் கூலிப்படையினராக மாறி ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரத்துக்கு கொலை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

இரட்டை இலையை கையகப்படுத்தி உள்ளார். ஜெயலலிதாவின் கட்சியை கபளீகரம் செய்துள்ளார். அவரிடம் இரட்டை இலை இருப்பதால் பலர் ஏமாந்து வருகின்றனர். 2026ல் கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதி விடுவார். கட்சியை அவர் வணிக ரீதியாக, வியாபாரமாக பயன்படுத்துகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post 2026ல் அதிமுகவுக்கு எடப்பாடி முடிவுரை: தினகரன் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Adamugawa ,Thinakaran Attack ,Trichy ,Secretary General ,Aamuka DTV ,Dinakaran ,EDAPPADI PALANISAMI THIRUNDUWAR ,
× RELATED கரூர்-திருச்சி பைபாஸ் சாலையில்...