×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மகன் போட்டியிட காங். தீர்மானம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வேண்டும் என மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஒன்றிய இணை அமைச்சரும், எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக நிறுத்துவதற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்பின் தலைவர்கள் சார்பில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை தமிழக மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மகன் போட்டியிட காங். தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : EVKS ,Erode East ,midterm elections ,Kang ,Ilangovan ,Erode ,East ,congress party ,Sanjay Sampath ,Congress ,Party ,Office ,Erode Municipal District ,Dinakaran ,
× RELATED ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு: பிப்ரவரியில் இடைத்தேர்தல்?